Delhi Fire Accident (Photo Credit: @vohrabs X)

ஜூன் 10, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகாவில் (Dwarka Apartment) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள 7வது மாடியில் வசித்து வரும் யாஷ் யாதவ், அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் கீழே குதித்தனர். இதில், அவர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள்.. வீட்டில் கிடந்த 115 ஆணுறைகள்.. ஷாக்கான அதிகாரிகள்..!

மூவர் பலி:

இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யாதவின் மனைவி மற்றும் மூத்த மகன் ஆகிய இருவரும் தீ விபத்தில் இருந்து உயிர் பிழைத்தனர். லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: