Prostitution Case in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 09, பரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் (Bareilly) உள்ள ராஜேந்திரநகரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மன்ஜித் கவுர் என்ற பெண்ணின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, ​​நவாப்கஞ்சைச் சேர்ந்த சுமித் சாகர், சுஹைல் மற்றும் 2 இளம்பெண்கள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வீட்டிலிருந்து 115 ஆணுறை பொட்டலங்கள் மற்றும் பாலுணர்வை அதிகரிக்கும் மருந்து பெட்டிகள் மீட்கப்பட்டன. ஃபேஸ்புக் காதலனை நம்பி வந்த பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பொதுமக்கள் குற்றச்சாட்டு:

இதுகுறித்த விசாரணையில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மன்ஜித் கவுரின் வீட்டிற்கு உயர் பதவியில் உள்ளவர்கள் வருவார்கள். இதன் காரணமாக, யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. கணவர்கள் வெளியில் வேலை செய்யும் நிலையில், பெண்கள் இங்கு வருவது வழக்கம். வீட்டில் அடிக்கடி விருந்துகளும் நடக்கும். மேலும், மாலை நேரத்தில், அங்கு சொகுசு கார்கள் கூடுவது வழக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.