Army Soldiers in Kashmir (Photo Credit: @JannateKashmi07 X)

செப்டம்பர் 14, காஷ்மீர் (Kashmir News): காஷ்மீரில் பாராமுல்லா (Baramulla) மாவட்டம், சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் தீவிரவாதிகள் (Terrorists) பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.  Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு (Gunfire) நடத்தினர். உடனே, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். சக் தாப்பர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சிக்கி 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பிங்னல் துகாடா வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ராணுவ வீரர்கள் (Army Soldiers) வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் விபன் குமார், அரவிந்த் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 2 வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.