மே 28, புதுடெல்லி (New Delhi News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து உலகத்தையே ஆட்டி படைத்தது. இதனால் உலகமே ஊரடங்கு என்ற பெயரில் அடங்கிப் போனது. கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். பின் கொரோனா பாதிப்பு அனைத்தும் முடிவடைந்து, மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக இருந்து வருகின்றனர்.
கொரோனாவின் புதிய ஆட்டம் :
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய ஆட்டம் துவங்கியுள்ளதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப இந்தியாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 753 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 19ஆம் தேதிக்கு பிறகு அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் 335 பேர், மகாராஷ்டிராவில் 154 பேர், டெல்லியில் 99 பேர், குஜராத்தில் 76 பேர், தமிழகத்தில் 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலுறவுக்கு மறுத்த 65 வயது பெண் கொடூர கொலை.. 45 வயது கள்ளக்காதலன் ஷாக் செயல்.!
இந்தியாவில் 6 பேர் உயிரிழப்பு :
மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மே 19ஆம் தேதிக்கு பிறகு மட்டும் கிட்டத்தட்ட 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஒருவர், கேரளாவில் ஒருவர், மகாராஷ்டிராவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.