ஜூலை 25, சித்தூர் (Andra Pradesh News): ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் 19 வயது தனியார் கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இவர் பி.டெக் முதலாமாண்டு பயின்று வருகிறார். இதே கல்லூரியில் 38 வயதுடைய பெண்மணி லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். பெண்மணி தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. கணவர் இல்லாததால் தனிமையில் இருந்த பெண்மணி கல்லூரி மாணவருடன் நட்பாக பழகிய நிலையில், பின்னாளில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.
கல்லூரி மாணவருடன் ஓட்டம் :
இதனிடையே கடந்த மே மாதத்தில் மாணவர் தனது பெற்றோரிடம் படிப்பு விஷயமாக பெங்களூருக்கு செல்வதாக கூறிவிட்டு பெண் ஊழியருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மாணவர் திரும்பி வராதால் சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்த போது பெண் ஊழியர் மற்றும் மாணவர் காதல் வயப்பட்டதும், இருவரும் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, சித்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரூ.5.4 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்.!
போலீசார் விசாரணை :
விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் பெங்களூருவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மாணவரை மீட்ட போலீசார், இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவமாக அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.