4 Children Die of Suffocation in AP (Photo Credit: @vaisaakhimedia X)

மே 19, விஜயநகரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விஜயநகரம் (Vizianagaram) மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து 10 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது, திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால், காருக்குள் சிக்கி 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். Trending Video: சாலையில் சிதறிக்கிடந்த ரூ.500 நோட்டுகள்.. முண்டியடித்து அள்ளிய மக்கள்.!!

4 பேர் பலி:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் உதய் (வயது 8), சாருமதி (வயது 8), சாரிஷ்மா (வயது 6), மானஸ்வி (வயது 6) என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.