Honor 90 Lite 5G (Photo Credit: Twitter)

செப்டம்பர் 14, புதுடெல்லி (Technology News): ஹானர் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Honor 90 5G ஸ்மார்ட்போன் சந்தைகளில் இன்று மதியம் 12:45 மணிமுதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ஹானர் 90 5G ஸ்மார்ட்போன், ரூ.27 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளியீடு விழாவில், ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களும் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, Honor 90 5G ஸ்மார்ட்போன், கேமரா தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமத்தை கொண்டு வந்துள்ளது.

200 MP Ultra Clear கேமரா, 50 MP செல்பி கேமரா, கண்களுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு உட்பட பல அம்சங்களை கொண்டுள்ளது. சில்வர், மயிலின் நீலம், எமரால்டு கிரீன், மிட்நைட் பிளாக் ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. AMOLED டிஸ்பிளே, 6.7 இன்ச் Quad Screen பொருத்தப்பட்டுள்ளது. Birth & Death Amendment Act 2023: பிறப்பு சான்றிதழ் வைத்தும் ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! 

Honor 90 Smartphone (Photo Credit: Twitter)

120 Hz Refresh Rate, 1600 nit Brightness, 66W Supersonic Charger போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 5 நிமிடத்தில் 20% சார்ஜ் ஏறிவிடும். 20 நிமிடத்தில் 100% சார்ஜ் ஏறும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. செல்போனில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்ட வீடியோ மட்டும் 20 மணிநேரம் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

12GB + 512GB Storage, MagicOS 7.1, 5G Network வசதியுடன் ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. இதனை ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்து வாங்கலாம். ஆன்லைனில் ரூ.27,999 க்கு விற்பனை தொடங்குகிறது. Internal Storage மாறுபாடுகளை பொறுத்து விலை மாற்றம் இருக்கும்.