Death Note Bangalore Student Suicide (Photo Credit : @Movies4u_Officl X)

ஆகஸ்ட் 11, பெங்களூரு (Karnataka News): பள்ளியில் பயின்று வரும் சிறுவன் ஒருவன் சர்வதேச அளவில் பிரபலமான 'டெத் நோட்' (Death Note) என்ற ஜப்பானிய அனிமேஷன் தொடரை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோனை கையில் வைத்துள்ள குழந்தைகள் எந்த மாதிரியான அனிமே (Anime) பார்க்கிறார்கள்? அவர்கள் என்ன மாதிரியான மனநிலையுடன் இருக்கிறார்கள்? என்பதை கட்டாயம் பெற்றோர் கவனிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு. Shocking Video: வாஷிங்மெஷினில் துணி போட்ட நபர் துடிதுடித்து மரணம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்.! 

டெத் நோட் அனிமே :

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜப்பானிய மொழியில் வெளியான காமிக் கதை டெத் நோட் (Death Note Anime). இந்த அனிமேவில் ஹீரோவான லைட் யாகாமி என்ற பள்ளி மாணவன் ஒருவருக்கு டெத் நோட் என்ற நரகத்தின் புத்தகம் கிடைக்கவே, அவர் குற்றவாளிகள், தவறு இழைப்பவர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களை அதில் எழுதி வைப்பதால் அவர்களின் மரணம் நிகழும். இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற கதைகளத்துடன் 37 எபிசோடுகளாக எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவன் தற்கொலை :

சமீப காலமாக ஜப்பானிய அனிமேஷன் இளம் தலைமுறையினர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெத் நோட் என்ற அனிமேவால் ஏற்பட்ட தாக்கத்தால் 7ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் நரகத்துக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த சிறுவன் தனது பெற்றோருக்கு இந்த அதிர்ச்சி கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.