அக்டோபர் 18, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த 7வது ஊதியக்குழு மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது. தற்போது தீபாவளி 2023 பண்டிகை காலம் நெருங்குகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை மத்திய அரசு பணியாளர்களுக்கான ஊதியத்தை 4% அளவு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. Punjab Murder: தாய்-மகள் சுட்டுக்கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.. காரணம் என்ன?.. பதறவைக்கும் சம்பவம்.!
இதைத்தவிர்த்து, கோதுமை மற்றும் பயறு உட்பட ஆறு ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 7% வரை உயர்த்த வைக்கப்பட்ட கோரிக்கை முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் அதுசார்ந்த அறிவிப்பு வெளியாகும்.