Poison Gas Death in Madhya Pradesh (Photo Credit: @piovijay X)

ஏப்ரல் 04, கந்த்வா (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா (Khandwa) மாவட்டத்தில் உள்ள சாய்கான் மஹான் பகுதியில் காங்கோர் பண்டிகையை கொண்டாட கிராம மக்கள் தயாராகி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, சுவாமி சிலைகளை நீரில் கரைப்பதற்காக, அங்குள்ள 150 ஆண்டு கால பழமையான கிணற்றை தூய்மைப்படுத்தும் பணியில் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அப்போது, முதலில் கிணற்றுக்குள் இறங்கிய நபர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்கும் முயற்சியில், அடுத்தடுத்து உள்ளே சென்ற 7 பேருக்கும் விஷவாயு தாக்கி, மொத்தம் 8 பேரும் கிணற்றின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Poonam Gupta: ரிசர்வ் வங்கியின் புதிய துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்..!

8 பேர் பரிதாப பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களான அனில் படேல் (வயது 25), அஜய் படேல் (வயது 24), ராகேஷ் படேல் (வயது 23), ஷரன் படேல் (வயது 35), கஜனன் படேல் (வயது 35), அர்ஜூன் படேல் (வயது 35), வாசுதேவ் படேல் (வயது 40), மோகன் படேல் (வயது 53) ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.