Baby (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், கோட்டா (Kota) பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முதல் கணவரை பிரிந்து விட்டு கூலித் தொழிலாளியான ஜித்து என்பவருடன், தனது 1 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 21) வீட்டில் அந்த குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. குழந்தை அழுது தனது தூக்கத்தை கெடுப்பதாக நினைத்த ஜித்து, உடனே அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்துள்ளார். Girl Rape And Murder Case: 16 வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கு; 5 பேருக்கு தூக்கு தண்டனை..!

கழுத்தை நெரித்து கொலை:

அதன்பின்னர், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை, குழந்தை எழுந்திருக்காததால், தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜித்து தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஜித்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.