ஜனவரி 23, கோர்பா (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா (Korba) மாவட்டத்தில் உள்ள கதுபுரோடா பகுதியை சேர்ந்தவர் சாந்த்ராம் மஞ்ச்வார் (வயது 49). இவரது வீட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமியை மஞ்ச்வார் தனக்கு இரண்டாவது மனைவியாக்க முயன்றார். இதற்கு சிறுமி மறுத்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மஞ்ச்வார் உள்ளிட்ட 6 பேர், சிறுமியை கூட்டு பலாத்காரம் (Gang Rape) செய்தனர். பின் கல்லால் தாக்கி கொன்றுவிட்டு, சிறுமியின் சடலத்தை அருகேயுள்ள வனப்பகுதியில் வீசினர். 2-Year-Old Child Dies: சூடான எண்ணெயில் விழுந்த 2 வயது சிறுவன் பரிதாப பலி.. உடல் வெந்து நடந்த சோகம்.!
தூக்கு தண்டனை:
மேலும், இதனை தடுக்க முயன்ற சிறுமியின் தந்தை (வயது 60) மற்றும் அவரின் 4 வயது பேத்தி ஆகியோரையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வழக்கு விசாரணை கோர்பா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிகள் சாந்த்ராம் மஞ்ச்வார், அவரது கூட்டாளிகள் பர்தேஷி ராம் (வயது 39), அப்துல் ஜப்பார் (வயது 34), ஆனந்த்ராம் பனிகா (வயது 29), அனில் குமார் சார்தி (வயது 24) ஆகியோருக்கு துாக்கு தண்டனையும், மேலும், ஒரு குற்றவாளி உமாசங்கர் யாதவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3