ஜூலை 20, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டம், பயாபர் கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தோழிகளுடன் சென்ற சிறுமியை ஆற்றங்கரை பகுதிக்கு கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்ட நிலையில், 75% தீக்காயங்களுடன் சிறுமி உயிர் தப்பினார். மேலும் தனது வீட்டிற்கு நடந்தே சென்ற சிறுமி பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கவே, அவர் மீட்கப்பட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். Karur News: மனைவியை குத்திக்கொன்ற கணவன்.. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கொடூரம்.!
அரசின் செலவில் சிறுமிக்கு சிகிச்சை :
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையில் பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அரசின் செலவிலேயே சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.