
மார்ச் 21, ராஜ்கர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் (Rajgarh) மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 19). இவர், உள்ளூர் சந்தையில் காய்கறிகளை வாங்கிவிட்டு, நைன்வாடாவில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சாரங்பூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில், அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கீழு விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. Engineering Student Attacked: மோசமான மதிப்பீட்டை வழங்கிய பொறியியல் மாணவர்.. 4 பேர் கொடூர தாக்குதல்..!
செல்போன் வெடித்து விபரீதம்:
இதனையடுத்து, அவர் சாரங்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், அவரது சகோதரர் கூறுகையில், செல்போன் புதிதாக வாங்கப்பட்டதாகவும், இரவு முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறினார். அவர், காய்கறி வாங்க செல்லும் போது, ஒரு மணி நேரம் கழித்து செல்போன் (Cell Phone Blast) திடீரென வெடித்தது தெரியவந்தது. தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.