Woman Suicide | Hanging Suicide File Pic (Photo Credit: @TheBharatPost_ X | Pixabay)

மே 26, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத்தைச் (Moradabad) சேர்ந்த இளம்பெண் அம்ரீன் (வயது 22). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். அம்ரீன், மொராதாபாத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அம்ரீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர், அம்ரீனின் வீட்டிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனைக் கேட்ட தாய், தனது மகள் அம்ரீன் தற்கொலைக்கு மாமியார் தான் காரணம் என்று குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்.. சக நண்பர்கள் வெறிச்செயல்..!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:

புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், கணவர் மற்றும் மாமியார் சித்ரவதையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. ‘கருச்சிதைவு ஏற்பட்டதில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை. அவர்கள் என்னை ஏதாவது சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். மேலும், எனது உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசுவார்கள். என் மைத்துனி கதீஜாவும், என் மாமனார் ஷாஹித்தும் தான் என் மரணத்திற்குக் காரணம். என் கணவரும் இதற்கு காரணம். அவர் என்னை புரிந்து கொள்ளவே இல்லை. ஒவ்வொரு முறையும் நான் தான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறார். அவரது தந்தையும், சகோதரியும் அவரிடம் அடிக்கடி எதையோ சொல்கிறார்கள். இதனால், நான் சலிப்படைந்து விட்டேன். இனிமேல், என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

போலீஸ் விசாரணை:

இதனால், எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். நான் இறக்கும்போது என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது இருப்பதை விட நான் நன்றாக இருப்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். இதனிடையே, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: