
மே 26, சாங்கிலி (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி (Sangli) மாவட்டத்தில் 22 வயது இளம்பெண், 3ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது வகுப்பு நண்பர்கள் 2 பேர் மற்றும் அவர்களது நண்பர் ஒருவருடன் தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில், தியேட்டருக்கு செல்வதற்கு முன்பாக, அவர்கள் 3 பேரும் அருகிலுள்ள ஒரு குடியிருப்புக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு, மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த பின்னர் மாணவி மயக்கமடைந்தார். பின்னர், 3 பேரும் மது அருந்தி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்தனர். குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. சிசிடிவியில் அம்பலமான உண்மை.!
மாணவி பாலியல் வன்கொடுமை:
இதனையடுத்து, மயக்கம் தெளிந்த மாணவி, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். அப்போது 3 பேரும், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மாணவியை மிரட்டியுள்ளனர். பின்னர், அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து, சில நாட்கள் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர், கர்நாடகாவில் பெலகாவியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார்.
மூவர் கைது:
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கடந்த 21ஆம் தேதி விஸ்ரம்பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், புனே சோலாபூர், சாங்கிலியைச் சேர்ந்த 3 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சாங்கிலி நீதிமன்றம், குற்றவாளிகள் 3 பேரையும் வரும் மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.