ஏப்ரல் 17, சென்னை (Technology News): கோடை வெயில் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில், ஒன்று தான் வீட்டில் ஏசி (Air Conditioner) அமைப்பது. இந்த சூழலில் ஏசி எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம். Medicinal Properties Of Garlic: பூண்டில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!
சுமார் 120 சதுர அடி வரையில் 110 வரை ஏசியை போடலாம். மேலும், 180 சதுர அடி அறையில் ஒன்றரை டன் ஏசி போட வேண்டும். இதுவே ஒரு பெரிய ஹால் என்றால், அதாவது 240 சதுர அடி இருந்தால் 2 டன் ஏசி போட்டுக்கொள்ள வேண்டும். இதில், உயர் ரக கம்பெனி பிராண்ட்களில் ஹைடெக், வைஃபை மாடலுடன் வாங்கிக்கொண்டால் அவற்றை செல்போன் மூலமே பயன்படுத்தி கொள்ளலாம். இதில், இன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் இல்லாதது என 2 வகைகள் உள்ளன. இன்வெர்ட்டர் ஏசியை கடையில் போட்டுக்கொள்ளலாம். ஏனெனில், இவற்றை காலை முதல் இரவு வரை பயன்படுத்துவார்கள்.
ஏசியை 24-ல் இருந்து 27 நம்பர் வரை வைத்துக்கொண்டால் சரியான அளவில் கூலிங் நமக்கு கிடைக்கும். ஏசியை வருடத்திற்கு 3 முறை சரியான முறையில் பராமரித்து வருவது நல்லது. இவ்வாறு செய்து வருவதன் மூலம் ஏசியை நாம் சரியாக பயன்படுத்தலாம். நாமே முடிந்த அளவிற்கு ஏசியை சுத்தம் செய்து பராமரித்துக்கொள்ள வேண்டும்.