
ஜூன் 14, அகமதாபாத் (Gujarat News Today): குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, கடந்த ஜூன் 12 மதியம் 01:30 மணிக்கு மேல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (Air India AI171 Boeing 787-8 Dreamliner) விபத்தில் சிக்கியது. விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தின் எஞ்சினுக்கு தேவையான மின்சக்தி கிடைக்காததால், விமானம் மேலே எழும்பத் தேவையான உந்து சக்தி கிடைக்காமல் கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 5 நிமிடத்திலும், மேலே பறக்கத் தொடங்கிய 30 வினாடிக்குள்ளும் விபத்தில் சிக்கியது. Anirudh Kavya Maran: 4000 கோடி சொத்துக்கு அதிபதி.. சன் டிவி காவியா மாறன் - அனிரூத் திருமணம்?
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து (Air India Plane Crash):
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 229 பயணிகள், 2 விமானிகள், 10 பணிப்பெண்கள் என 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் 11A இருக்கையில் (11A Seat Air India Flight) பயணம் செய்த விஷ்வாஸ் ரமேஷ் என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் மட்டுமே அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார். ஒரு பெண்மணி விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடத்தில் தவறவிட்டு உயிர் தப்பினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் இது முக்கியமானது ஆகும். குடும்பமாக இங்கிலாந்தில் செட்டில் ஆகலாம் என குழந்தைகளுடன் பயணித்த நபர்கள் முதல் பலரும் என 241 உயிர்கள் விபத்தில் காவு வாங்கப்பட்டது. விமானம் விழுந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் கவலை:
இந்நிலையில், பிரபல நடிகர் பாலா தனது முன்னாள் மனைவியும், மருத்துவருமான எலிசபெத் உதயனின் நிலைமையை எண்ணி கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏனெனில், எலிசபெத் மருத்துவராக பணியாற்றி வரும் கல்லூரி விடுதியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதனால் அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள், அவரிடம் பயின்ற மாணவர்களும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த பின்னர் தனது கல்லூரியில் விமானம் விழுந்துவிட்டது. எனது நண்பர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என எலிசபெத் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூறியுள்ளார்.