ஜூன் 09, பீட் (Maharashtra News): 2024 மக்களவை தேர்தலில், பாஜக தேசிய அளவில் மூன்றாவது முறை தொடர்ந்து ஆட்சியை அமைத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. ஜூன் 09ம் தேதியான இன்று பிரதமர், மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா சிறப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலைல்யில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளராக களமிறங்கியவர் பங்கஜா முண்டே. இவர் தேர்தல் முடிவுகளின்படி தோல்வியை சந்தித்தார்.
உடல் நசுங்கி மரணம்: இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 38 வயதாகும் லாரி ஓட்டுநர், பேருந்து பின்னோக்கி இயங்கியபோது உடல் நசுங்கி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கிங்கான் காவல் துறையினர், விபத்தில் பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். Pilgrims Bus Terror Attack in JK: ஜம்மு காஷ்மீரில் யாத்திரீக்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 10 பேர் பலி?..! பிரதமர் பதவியேற்பு விழா அன்று பயங்கரம்.!
வீடியோ பதிவுக்கு பின் மரணம்: விபத்தில் பலியானவர் லத்தூர், அகமதுபூர், எஸ்தார் கிராமத்தை சேர்ந்த சச்சின் கொண்டிப்பா முண்டே (வயது 38) என்பது உறுதியானது. இவர் தனது தொகுதி பாஜக வேட்பாளர் தேர்தலில் தோல்வியுற்றதில் இருந்து வருத்தத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கைப்பட செல்போனில் வேட்பாளர் தோல்வி அடைந்ததால் இனி நான் இல்லை என வீடியோ பதிவு செய்து இருக்கிறார். இதன்பின்னரே இவர் மரணம் அடைந்த காரணத்தால், தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.
வேட்பாளர் தோல்வியால் விரக்தி? தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த சச்சின் முண்டே, தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். அவர் பெரிதும் எதிர்பார்த்த பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே, காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் சோனாவிடம் 6,553 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.