Wedding Boil Vessel (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் (Bhopal), நிஷாத்புரா பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் சாஹு. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 7 வயதுடைய மற்றும் 2 வயதுடைய அக்சத் என்ற மகன் இருக்கின்றனர். ராஜேஷ் சாஹு அங்குள்ள பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தம்பதிகள் இருவரும் நிஷாத்புரா, சங்க்சத் நகரில் பகுதியில் வசித்து வரும் உறவினரின் நிச்சயதார்த்தத்திற்கு சம்பவத்தன்று சென்றுள்ளனர். அங்கு குடும்பத்தினரை இருவரும் கவனித்துக்கொண்டு இருந்தனர். பிள்ளைகள் இருவரும் வீட்டின் பகுதியிலேயே அங்கும்-இங்குமாக விளையாடி வந்துள்ளனர். சிறுவன் அக்சத் தனது மாமாவின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. Pushpak Express Tragedy: பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சோகம்.. 10 பேர் பலி., 30 பேர் படுகாயம்.! 

கொதிக்கும் எண்ணெயில் விழுந்து சோகம் (2 Year Old Dies Fallen into Boiling Oil):

குழந்தைகள் அங்குள்ள பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இரவு சுமார் 11 மணியளவில், உணவு தயாரிக்கப்பட்டு இருந்த கொதிக்கும் நிலையில் இருந்தே எண்ணெயை அப்புறப்படுத்தி வைத்துள்ளனர். எண்ணெய் சட்டி தோட்டத்தில் இருந்துள்ளது. பத்து, தோட்ட பகுதிக்கு சிறார்களுடன் விளையாடச் சென்ற 2 வயது சிறுவன், தவறுதலாக கொதிக்கும் தன்மை கொண்ட எண்ணெயில் விழுந்து இருக்கிறார். இதனால் சிறுவன் அலறிய நிலையில், சத்தம் கேட்டு சென்ற சமையலர்கள் இரண்டு பேர், சிறுவனை மீட்கும் முயற்சியில் காயமடைந்தனர். சுமார் 50% தீக்காயத்துடன் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிறுவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிச்சய விழாவில் சிறுவன் எண்ணெய் கொப்பரையில் விழுந்து பலியான சோகம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.