Bangladesh Fighter Jet Crash (Photo Credit : @247able X)

ஜூலை 21, வங்கதேசம் (World News): வங்கதேசம் நாட்டில் உள்ள டாக்கா நகரின் உத்தாரா பகுதியில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் வங்கதேச விமானப்படை சார்பில் போர் விமானம் பயிற்சி மேற்கொண்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் பள்ளி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Breaking: சிவகாசியில் பயங்கரம்.. பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து.. 3 பேர் பலி.! 

போர் விமானத்தால் 19 பேர் பலி :

முதற்கட்டமாக இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், விபத்தில் சிக்கி பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் 70 % முதல் 80 % தீக்காயங்களுடன் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து தொடர்பான வீடியோ :