Model Murder in Haryana (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 16, சோனிபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், சோனிபாத் (Sonipat) மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மாடல் ஷீத்தல் சவுத்ரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர் ஆவார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.6 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 14) ஷீத்தல் சவுத்ரி ஒரு இசை வீடியோவின் படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறினார். இதன் பிறகு, அவரைத் தொடர்புகொள்ள முடியாததால், அவரது சகோதரி நேஹா காவல்நிலைத்திற்கு சென்று தனது சகோதரியை காணவில்லை என புகார் அளித்தார். Aryan Ansari: அகமதாபாத் விமான விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் தகவல் சொன்ன சிறுவன்.!

மாடல் அழகி கழுத்தறுத்து கொலை:

இதன் பின்னர், நேற்று (ஜூன் 15) அடையாளம் தெரியாத ஒரு உடல் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரது கைகள் மற்றும் மார்பில் பச்சை குத்தியதன் மூலம் உடல் அடையாளம் காணப்பட்டது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில், மாடல் அழகி கழுத்தை அறுத்து கொலை (Murder) செய்யப்பட்டுள்ளார். கைகள் மற்றும் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளன. அந்த உடல் மாடல் ஷீத்தல் சவுத்ரி தான் என அடையாளம் காணப்பட்டது.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்த விசாரணையில், தனது காதலன் சுனில் தன்னை அடித்ததாக ஷீத்தல் தொலைபேசியில் கூறியதாக மாடல் அழகியின் சகோதரி நேஹா கூறினார். மாடல் அழகியை அவரது காதலன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.