டிசம்பர் 27, சாம்ராஜ்நகர் (Karnataka News): கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் (Chamarajanagar) மாவட்டத்தில் உள்ள ஹனுாரின் பிதரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் அமல்ராஜ் (வயது 40). இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலை காரணமாக ராம்நகரின் பிடதிக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஷோபா (வயது 35) என்பவர் அறிமுகமானார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். Shocking Video: ரீல்ஸ் வீடியோவுக்காக மகனின் உயிருடன் விளையாடிய தந்தை; அதிர்ச்சிதரும் வீடியோ உள்ளே.!
குடிபோதையில் தகராறு:
இதனையடுத்து ஷோபாவும், அமல்ராஜும் காதலித்து இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஷோபாவையும், குழந்தைகளையும் தனது சொந்த ஊரான ஹனுாரின் பிதரஹள்ளிக்கு அமல்ராஜ் அழைத்துச் சென்றார். இவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு முறை குடிபோதையில் தகராறு (Drunken Dispute) செய்ததால், அமல்ராஜ் ஏற்கனவே சிறைக்கு சென்று வந்தார்.
மனைவி கொலை:
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, காலையில் வீட்டில் பார்ட்டி நடத்தினர். அப்போது, குடிபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், பெரிய கல்லை ஷோபாவின் தலையில் போட்டு கொலை (Murder) செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமாபுரா காவல்துறையினர் அமல்ராஜை கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.