
ஜூன் 05, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் (Kolhapur) நகரின் சிவாஜி பெத்தில் வசிக்கும் சமிக்ஷாவும் (வயது 23), சதீஷும் ஒரே இடத்தில் வேலை செய்து சர்னோபத்வாடியில் ஒன்றாக வசித்து வந்தனர். அங்கு இருவரும் கடந்த சில மாதங்களாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சதீஷ், சமிக்ஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், சமிக்ஷா இதற்கு மறுத்துவிட்டார். Husband Kills Wife: காதல் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!
இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை:
இதனால் கோபமடைந்த சதீஷ், சர்னோபத்வாடியில் உள்ள ஒரு அறையில் தனது தோழியுடன் இருந்தபோது, சமீஷாவை கத்தியால் (Murder) குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சமீஷாவை, சதீஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காந்தி நகர் காவல்துறையினர் சதீஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.