
ஜூன் 05, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரை (Gorakhpur) சேர்ந்தவர் அங்கத் வர்மா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நேஹா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, அவர் தனது காதல் மனைவி நேஹாவுடன் கேரளா சென்றார். பின்னர், அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தபோது, குடும்பத்தினர் கோபமடைந்தனர். காரில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த கயவன்.. உடந்தையாக தாய்.. பதறவைக்கும் சம்பவம்.!
காதல் மனைவி கொலை:
இதனையடுத்து, அவர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, அவரது மனைவி தனது அக்கா வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த, அவரது கணவர் தனது காதல் மனைவியை பலமுறை கண்டித்தும், அவரை கைவிட மறுத்துள்ளார்.
போலீஸ் விசாரணை:
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை (Murder) செய்தார். பின்னர், அவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.