Earthquake (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 27, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 27) அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. கவுகாத்தி (Guwahati) மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 2.25 மணியளவில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. Viral Video: செல்போனை நீரில் மூழ்கி எடுத்த பெண்.. கும்பமேளாவில் வினோத சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே..!

அசாம் நிலநடுக்கம்:

நில அதிர்வு செயல்பாட்டின் மையப்பகுதி மற்றும் தாக்கம் குறித்த விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றான அசாமில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும். இது நில அதிர்வு மண்டலம் V இன் கீழ் வருகிறது. அதாவது, வலுவான நிலநடுக்கங்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. முன்னதாகவே, வங்கக்கடலில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.