Woman Sexual Abuse CCTV Video (Photo Credit: @gharkekalesh X)

ஏப்ரல் 07, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) சுத்தகுண்டேபல்யா பகுதியில் உள்ள தெருவில், ஒரு பெண் தனது தோழியுடன், இரவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​ஒரு நபர் திடீரென அவர்களை பின்தொடர்ந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக கைகளால் தொட்டு, பாலியல் தொல்லை (Sexual Abuse) செய்துள்ளார். இந்த கொடூரமான சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Biryani Delivery: வெஜ் பிரியாணி கேட்ட சைவ பிரியருக்கு அதிர்ச்சி.. கண்ணீருடன் வெதும்பிய பெண்.!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை:

இதுவரை பாதிக்கப்பட்டவர் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை, இருப்பினும், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளதால், அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.