Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 24, நூஹ் (Haryana News): ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டத்தை (Nuh District) சேர்ந்தவர் முகுந்த் என்ற பாபி (வயது 55). இவருக்கு நண்பர் ஒருவர் உள்ளார். பாபியும், அவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்நிலையில், பாபி அவ்வப்போது நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாபி தனது நண்பரின் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். Monkeypox Virus: இந்தியாவில் மீண்டும் நுழைந்தது எம்பாக்ஸ் வைரஸ்; 40 வயது நபருக்கு உறுதி..!

பாலியல் வன்கொடுமை:

இதனையடுத்து, அந்த வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். பின், அதனையும் வீடியோ எடுத்து மிரட்டிய பாபி, தனது வேறொரு நண்பருடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி இருக்கிறார். தொடர்ந்து 12க்கும் மேற்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றபின்னர், வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

பெண் சீரழிப்பு:

மேலும், தினமும் தான் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், தனது கணவரிடம் அழுத புலம்பியபடி, நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முகுந்த் என்ற பாபியை கைது செய்தனர். மேலும், பெண்ணை பலாத்காரம் (Rape) செய்து சீரழித்த பிற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3