Monkeypox Virus (Photo Credit: @weatherindia X)

ஜனவரி 24, உடுப்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் வசித்து வந்த 40 வயது நபர் துபாய்க்கு சென்றிருந்த நிலையில், அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு உடல்நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியாகவே, சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி இருக்கின்றனர். கடந்த 19 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்தவர், ஜனவரி 17 அன்று தாயகம் திரும்பியபின் நடந்த சோதனையில், அவருக்கு எம்.பாக்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் பயணித்த இடங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். Spravato Nasal Spary: மூக்கின் வழியாக செலுத்தப்படும் ஜான்சன் நிறுவனத்தின் மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி.! 

2025ம் ஆண்டின் முதல் குரங்கம்மை தொற்று:

எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், தசை வலி போன்றவற்றை உணருவார்கள். கொரோனாவை போல கடுமையான பாதிப்புகளை எம்.பாக்ஸ் ஏற்படுத்தாது எனினும், அதனை அலட்சியப்படுத்தினால் மரணமும் நிகழலாம். அதனால், தொடக்கத்திலேயே மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். 2025ம் ஆண்டில் இந்தியாவின் முதல் எம்.பாக்ஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டு, தற்போது உடுப்பியை சேர்ந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விலங்குகளால் பரவுகிறது:

குரங்கு, எலி, அணில் போன்ற விலங்குகள் வைரஸால் பாதிக்கப்பட்டு, அவை கடித்தால், நகக்கீறலை ஏற்படுத்தினால் இவ்வகையான வைரஸ் பரவுகிறது. செல்லப்பிராணிகளுடன் பழகினாலும், அவை தாக்குதல் நடத்தினாலும் இவ்வாறான வைரஸ் பரவும். காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி, சோர்வு, குளிர், தொண்டை புண், இரும்பல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனையில் அனுமதியாகி சோதனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டால் உடல்நலம் முன்னேறிவிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.