Woman Murder Case in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 09, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், குருகிராமை சேர்ந்தவர் ஜோதி. கடந்த ஒரு வருடம் முன்பு இவருக்கு திருமணமான நிலையில், சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் நீத்து என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளார். மேலும், தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், கடந்த மே 31ஆம் தேதி அன்று, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதி வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நீத்து, தனது காதலியை கொலை செய்தார். Mumbai Train Accident: கூட்ட நெரிசல்.. இரயிலில் தொங்கியபடி பயணித்த 5 பேர் பலி.. 7 பேர் படுகாயம்.!

பெண் கழுத்து நெரித்து கொலை:

இதுதொடர்பாக, நீத்துவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சேஜானா கிராமத்தின் காட்டில் நீத்து தனது 2 நண்பர்கள் ரஞ்சித் குமார் மற்றும் சஞ்சித் குமார் ஆகியோருடன் சேர்ந்து, பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று (Murder), பெண் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வேண்டும் என ஒரு மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். விசாரணையில் நீத்து அனைத்தையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.