Yamuna River Death Victims (Photo Credit : Youtube)

ஜூன் 05, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா, யமுனை நதிக்கரையில் உள்ளூரை சேர்ந்த சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆற்று நீரில் ரீல்ஸ் எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. செல்பி, ரீல்ஸ் எடுக்கும் முயற்சிக்குப் பின் இவர்கள் நீரில் இறங்கியதாகவும் தெரியவரும் நிலையில், ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர். Corona Virus: இந்தியாவில் கொரோனா திடீர் உச்சக்கட்டம்.. ஒரே நாளில் 564 பேர் பாதிப்பு.. 7 பேர் மரணம்.! 

நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சிறார்கள் :

இதனால் ஆறு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் இவர்களின் உடலை மீட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறார்கள் எடுத்துக்கொண்ட செல்பி தொடர்பான புகைப்படமும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யமுனா நதிக்கரையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட மீட்புபடையினர் :