Prisoner Shot Dead in Patna Hospital (Photo Credit: @imdazamalam X)

ஜூலை 17, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், பாட்னாவில் (Patna) உள்ள ராஜா பஜார் பகுதியில் பாரஸ் என்ற தனியார் மருத்துவமனையில், மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வந்திருந்த ஒரு கைதியை மர்ம நபர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டனர். கொல்லப்பட்டவர் பக்ஸர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தன் மிஸ்ரா ஆவார். இவர், மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் பெயூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி கொலை.. காதலன் போலீஸில் சரண்..!

கைதி சுட்டுக்கொலை:

இந்நிலையில், ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தன் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியூ வார்டு அறைக்குள் நுழைந்து, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: