Woman Murder UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 17, மதுரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் (Mathura) மோனிகா (வயது 23) என்ற பெண்ணை, அவரது திருமணமான காதலன் ராகுல் ராஜ்புத் கழுத்தை நெரித்து கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, அவர் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர், தான் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக ஒரு குழுவை அனுப்பி, குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வாடகை அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு பெண்ணின் உடல் சடலமாக கிடந்தது. பெண்ணின் கழுத்தில் அழுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் அத்துமீறல்..!

பெண் கழுத்து நெரித்து கொலை:

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ராகுல் தான் திருமணமானவர் என்றும், மோனிகாவுடன் சிறிது காலம் காதல் கொண்டிருந்ததாகவும் கூறினார். மோனிகா அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ராகுலுக்கு இது பிடிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராகுல் ஆத்திரத்தில் மோனிகாவை கழுத்தை நெரித்து (Murder) கொன்றுள்ளார். பின்னர், ராகுல் நேராக காவல்நிலையத்திற்குச் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.