பிப்ரவரி 07, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், ஹாவேரி (Haveri) மாவட்டத்தில் அடூர் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 7 வயது சிறுவனுக்கு விளையாடும் போது கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தையல் போடுவதற்காக ஆரம்ப சுகாதார மையத்திற்கு உறவினருடன் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த ஜோதி சிறுவனின் கன்னத்தில் தையல் போடுவதற்கு பதிலாக பெவிக்விக் (Fevikwik) தடவி பேண்டேஜ் போட்டு அனுப்பியுள்ளார். Son Kills Father: குடும்ப தகராறில் தந்தை வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!
செவிலியர் அதிர்ச்சி செயல்:
இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இரவு அந்த செவிலியரின் வீட்டிற்கே நேரில் சென்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, தையல் போட்டால் கன்னத்தில் தழும்பு தெரியும். ஆனால், பெவிக்விக் போட்டால் தழும்பு தெரியாது. இப்படிதான் பல வருடங்களாக என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு செய்து வருவதாக செவிலியர் ஜோதி தெரிவித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த சிறுவனின் பெற்றோர் மருத்துவ அதிகாரிகளிடம் முறையாக புகார் அளித்தனர். இதனையடுத்து, செவிலியர் ஜோதியை பணியிடை மாற்றம் செய்து மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.