பிப்ரவரி 07, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரம் (Thiruvananthapuram) மாவட்டத்தில் உள்ள வெள்ளரடா பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் (வயது 70). இவரது மகன் பிரதீப் (வயது 28). இவர், சீனாவில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார். கொரோனா காலத்தில் கேரளா திரும்பினார். ஆனால், இதுவரை எம்.பி.பி.எஸ்., படிப்பை அவர் முடிக்கவில்லை. Minor Girl Rape Case: 17 வயது சிறுமி 10 மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. எச்ஐவி நபர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
வீட்டில் அதிர்ச்சி சம்பவம்:
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 05)இரவில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ஜோஸ் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த அவரது மனைவி சுஷாமா அலறியடித்து பின் மயங்கி விழுந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தந்தை வெட்டிக் கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஜோஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் விசாரணையில், தந்தையை மகனே வெட்டிக்கொலை (Murder) செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு தப்பிய பிரதீப் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதன் முதற்கட்ட விசாரணையில், தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்காததால், ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.