Gang Rape (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, பெங்களூரு (Karnataka News): கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பிஎம்டிசி பேருந்துக்காக இரவு 11.30 மணிக்கு காத்திருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் எலஹங்கா செல்லும் பேருந்து எப்போது வரும் என்று இந்த பெண் கேட்டார். Road Accident: லாரி கவிழ்ந்து கோர விபத்து; 10 பேர் உடல் நசுங்கி பலி..!

கூட்டு பாலியல் வன்கொடுமை:

உடனே அவர்கள், பேருந்து வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த தங்க செயின் உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் (ஜனவரி 20) எஸ்ஜேபார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இருவர் கைது:

இதனையடுத்து, சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் சரவணன் (வயது 35) மற்றும் கணேஷ் (வயது 27) ஆகியோரை காவல்துறையினர் நேற்று (ஜனவரி 21) கைது செய்தனர். தமிழக பெண் பெங்களூருவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3