Scam Alert (Photo Credit: Pixabay)

மார்ச் 27, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் (Mumbai) சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், தனது பிரச்சனைகளை சரிசெய்ய ஜோதிடத்தின் மூலம் ஆறுதல் தேடினார். ஆபத்துகளைப் பற்றி அறியாமல், டெவின்டாக் (DevineTalk App) செயலியைப் பதிவிறக்கம் செய்தார். அதில், கடந்த ஜனவரி மாதம், அவர் நிஷாந்த் என்ற ஆன்மீக வழிகாட்டியுடன் தொடர்பு கொண்டார். அவர் தனது வாழ்க்கையின் எதிர்மறையான எண்ணங்களை தூய்மைப்படுத்த ரூ.6,300க்கு ஒரு சடங்கை பரிந்துரைத்தார். Viral Video: பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் தப்பியோட்டம்.. 2 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த காவலர்.., வைரலாகும் வீடியோ..!

ஆன்லைன் மோசடி:

இதனையடுத்து நிஷாந்த், படே மகாராஜ் என்ற மரியாதைக்குரிய நபரே புனித சடங்கை நேரில் செய்வார் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சடங்கைத் தொடங்க படே மகாராஜ், முதலில் ரூ.15,300 கேட்டார். கூடுதல் காரணங்களுக்காக, மேலும் ரூ.28,000 கேட்டுள்ளார். ஆன்மீக வழிகாட்டுதலை நம்பி, தொழில்நுட்ப வல்லுநர் நிதியை மின்னணு முறையில் மாற்றினார். தொடர்ந்து, படே மகாராஜ் இரவில் தாமதமாக அவரை அழைத்து, சில சடங்குகள் முழுமையடையவில்லை என்று கூறி கூடுதலாக ரூ.20,000 கேட்டார்.

மிரட்டிய மோசடி கும்பல்:

இவ்வாறு தொழில்நுட்ப வல்லுநர் மொத்தம் ரூ.2.41 லட்சத்தை கொடுத்த நேரத்தில், சடங்குகள் முடிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அவரை மிரட்டினர். இதனால் அவர், தனது கிரெடிட் கார்டுகளை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, தனியார் கடன் வழங்குபவர்களிடமிருந்து கடன் வாங்கி, மோசடி (Scam Alert) செய்பவர்களுக்கு பணம் கொடுத்தார். 6 நாட்களில், அவர் ரூ.12.20 லட்சத்தை மோசடியில் இழந்தார். மோசடி செய்பவர்கள் அவரது பயத்தையும் விரக்தியையும் பயன்படுத்தி அவரைத் தொடர்ந்து ஏமாற்றினர். ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கடந்த மார்ச் 24ஆம் தேதி, சைபர் கிரைமில் மோசடி குறித்து புகார் அளித்தார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.