ஆகஸ்ட் 13, பாகல்பூர் (Bihar News): பீகார் மாநிலம், பாகல்பூர் (Bhagalpur) மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) இஷாக்சாக் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் குடியிருப்பில் பெண் காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அந்த அறையில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் காவலர் நீத்து குமாரி தனது கணவர் பங்கஜ் குமார் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுடன் நீத்து குமாரியின் தாயார் இருந்துள்ளார். Youth Flashing At Female Doctor: ச்சீ.. பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அதிர்ச்சி தந்த இளைஞன்; படுகேவல செயல்..!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பங்கஜ் குமார் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 12) மாலை வேளையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது மனைவி, அவரது தாய் மற்றும் 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொலை (Murder) செய்துவிட்டு, பின்பு அவர் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.