ஜூலை 28, பரிதாபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் (Faridabad) உள்ள ஓயோ ஹோட்டலில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ஷீபா என்பது தெரியவந்தது. இவர், தீபக் என்ற வாலிபரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஷீபா ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து வந்தார். Viral Video: பைக்கில் காதல் ஜோடி அநாகரீகம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
காதலி கொலை:
இந்நிலையில், ஷீபா தனது காதலனை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தீபக் அவளை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். தொடர்ந்து, வற்புறுத்தி வந்த நிலையில், காதலன் தீபக், தனது காதலியை ஓயோ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, கழுத்து நெரித்து கொலை (Murder) செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஷீபாவின் தாய் ரசியா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காதலன் தீபக்கை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.