
மே 27, பெல்காம் (Karnataka News): கர்நாடக மாநிலம், பெல்காம் (Belgaum) மாவட்டத்தில் உள்ள மெகாலி கிராமத்தை சேர்ந்தவர் லோஜேஸ்வரா மகராஜ். இவர், கோவில் பூசாரியாக பணி செய்து வருகிறார். சமீபத்தில், இவர் காரில் சென்றபோது, அவ்வழியாக 17 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி, காரில் ஏற்றி சென்ற பூசாரி, ராய்ச்சூரில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை.. காரில் சடலமாக 7 பேர்.!
சிறுமி பாலியல் பலாத்காரம்:
அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். அங்கிருந்து பாஹல்கோட் சென்றவர் மீண்டும் ஒரு விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பெல்காமில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டிற்கு சென்றதும் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பூசாரி கைது:
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3