UP Bike Fire (Photo Credit: @hbtv_in X)

ஜூன் 02, பஸ்தி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பஸ்தி (Basthi) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை அருகே வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பைக் உரிமையாளர் ஆஷிப் கான் என்பவர், அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றார். அப்போது, பைக் தீப்பற்றி (Fire Accident) எரியத் தொடங்கியது. உடனே, அவர் அங்கிருந்து விலகிச் சென்று உயிர் தப்பினார். மேலும், அருகில் இருந்த ஸ்கூட்டரின் மேல் விழுந்து தீப்பற்றி எரிந்தது. NEET-PG 2025 Postponed: முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு..!

பைக் தீப்பற்றி எரிந்தது:

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிக வெப்பத்தால், பைக் தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: