செப்டம்பர் 23, ஜான்சி (Uttar Pradesh News): இன்றைய இளம் தலைமுறையினரிடையே ரீல்ஸ் (Reel Video) மோகம் அதிகரித்து வருகின்றது. அதனால் பல விபரீதங்களும் நிகழ்கின்றன. இளைஞர்கள் தெருக்களில் ரீல்களை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் (Jhansi) இருந்து ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது, இரு இளைஞர்கள் பைக்கில் வருகின்றனர். அதில், ஒருவர் இந்த முதியவரின் முகத்தில் ஃபாக் ஸ்பிரேயை (Spray) தெளித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..
இதனால், அந்த முதியவரின் முகத்தில் முழுவதுமாக வெள்ளை நுரை தெரிகின்றது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பொதுமக்கள் கோபமடைந்து, இதில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஜான்சியின் நவாபாத் காவல்நிலையப் பகுதியில் உள்ள எலைட் சித்ரா சாலையின் மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
முதியவரின் முகத்தில் வாலிபர்கள் ஸ்பிரே அடித்த வீடியோ:
उत्तर प्रदेश: रीलबाज़ो से सड़क पर चलते लोग भी सुरक्षित नहीं...
- झांसी के नवाबाद थाना क्षेत्र में बाइक सवार रीलबाज ने बुजुर्ग के साथ की भद्दी हरकत. #UttarPradesh #Jhansi #reelsvideo #UPPolice #ViralVideos #Nedricknews @Uppolice @jhansipolice @dgpup @uptrafficpolice pic.twitter.com/B7MImdUkMy
— Nedrick News (@nedricknews) September 22, 2024