ஏப்ரல் 20, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமய்யா மாவட்டம், கலிவீடு கிராமத்தில் வசித்து வரும் தம்பதி விக்ரம்-நாகமணி (வயது 30). இவர்களுக்கு நவ்யஸ்ரீ, தினேஷ் மற்றும் ஜாஹ்னவி ஆகிய 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டுள்ளது. Bus Accident: காவல்துறையினர் சென்ற பேருந்து விபத்து; 21 பேர் படுகாயம்..!

இதனையடுத்து, நேற்றிரவு பணம் சம்மந்தமாக விக்ரமுக்கும் நாகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நாகமணி, திடீரென தனது 3 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அருகில் உள்ள கந்திமடுகு பாசன குளத்திற்கு சென்றுள்ளார். அந்த குளத்தில் தனது 3 குழந்தைகளையும் தள்ளிவிட்டு, பிறகு அவரும் அதில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதில், அவர்கள் நான்கு பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகமணியின் கணவர் விக்ரமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.