செப்டம்பர் 23, அராரியா (Bihar News): பீகார் மாநிலம், அராரியா (Araria) மாவட்டத்தில் உள்ள ஜோகிஹாட் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர், நிலப் பிரச்சினையைத் (Land Dispute) தீர்ப்பதற்காக சென்றனர். அப்போது, அவர்கள் வில் மற்றும் அம்புகளால் (Arrow) தாக்கப்பட்டுள்ளனர். இன்று (செப்டம்பர் 23) காலை ஜோகிஹாட் பிளாக்கில் உள்ள மஹால்கான் (Mahalgawan) காவல்நிலையத்திற்கு உட்பட்ட பொக்காரியா கிராமத்திற்கு காவல்துறையினர் குழு சென்றது. அங்கு சில நபர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!
மஹால்கான் காவல் நிலையத் தலைவர் மற்றும் காவல்துறையினர் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சம்பவ இடத்திற்கு வந்தபோது, கூட்டத்தில் இருந்த சில நபர்கள் காவல்துறையினரை வன்முறையில் தாக்கினர். அப்போது, பெண் காவலர் நுஸ்ரத் பர்வீன் அம்பினால் தாக்கப்பட்டார். உடனடியாக மீட்டு, பூர்னியாவில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.