Etah Live Wire Death (Photo Credi @TrueStoryUP X)

ஜனவரி 13, எட்டாஹ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் கோவிந்த் (வயது 45). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. இதனிடையே, அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக, ஆத்திரமடைந்த மனைவி கணவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனைவிக்கு தொடர்புகொண்ட கணவர், மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதனை பெண்மணி ஏற்றுக்கொள்ளவில்லை. செல்போன் பார்த்தபடி அலட்சியமாக சாலையை கடந்த இளைஞர்; கன்னத்திலே பளார் விட்ட காவலர்.! 

மின்சார வயரை பிடித்து உயிரிழந்த சோகம்:

இதனால் வேதனையடைந்தவர், நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என மிரட்டி இருக்கிறார். மனைவி இதனை கண்டுகொள்ளாத நிலையில், ஆத்திரத்தில் கோவிந்த் வீட்டின் அருகே செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து இருக்கிறார். 11 கிலோவாட் உயர் மின்சாரம் பாயும் கம்பியை அவர் பிடித்ததால், சில நொடிகளில் உடல் கருகி கோவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிந்தின் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார கம்பியை பிடித்து உயிருடன் எரிந்து சாம்பலான நபர்: