ஏப்ரல் 25, பால்லியா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டம், சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் பிந்த் (வயது 26) என்பவருக்கு திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போது, லட்சுமி (24 வயது) என்ற இளம்பெண் அங்கு வந்துள்ளார். Robbery Attempt In Tirunelveli: காதலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 3 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்நிலையில், அந்த இளம்பெண் கொண்டு வந்திருந்த பையில், கழிவறையை சுத்தம் (Toilet Cleaner) செய்ய பயன்படுத்தப்படும் திராவகம் இருந்துள்ளது. திடீரென அவர், மாப்பிள்ளை மீது திராவகத்தை வீசியுள்ளார். இதில், ராகேஷின் முகம் மற்றும் உடம்பில் சில பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் லட்சுமியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அந்த இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ராகேஷ் என்பவரை லட்சுமி காதலித்து வந்துள்ளார். ஆனால், தற்போது அவருக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் நடைபெற உள்ளதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர் மீது திராவகம் வீசினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.