Visual From Video (Photo Credit : @mumbaitez X)

ஜூலை 23, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா பகுதியில் சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு பயன்று வருகிறார். இவர் வசித்து வரும் பகுதியிலேயே 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வசித்துவரும் நிலையில், சிறுமியை கடந்த பல மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பின் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில், அதனை சிறுமி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த சிறுமியை இளைஞர் தடுத்து நிறுத்தி கத்தியை காண்பித்து மிரட்டி இருக்கிறார். Trending Video: காவி உடையில் ஆபாச நடனமாடிய பெண்கள்.. பாத யாத்திரையில் பகீர்.! 

இளைஞரை வெளுத்த மக்கள் :

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் ஒன்று கூடியதால் அவர் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் சாதுர்யமாக இளைஞரிடம் பேச்சு கொடுத்தவர்கள் சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியிடம் கத்தியை காட்டி இளைஞர் மிரட்டிய வீடியோ :