Delivery agent & customer fight (Photo Credit :@jsuryareddy X)

மே 30, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ஆன்லைன் டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூர், பசவேஸ்வர நகர் பகுதியில் கடந்த மே 21ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது இதன் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், வாடிக்கையாளர் சஷாங் என்பவர் சம்பவத்தன்று டெலிவரி ஊழியர் விஷ்ணுவரதன் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.

எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதி :

சஷாங்கின் மனைவியுடைய தங்கை தவறான முகவரியை பதிவிட்டு பொருள்களை ஆர்டர் செய்த நிலையில், அதனை தேடி வந்து கொடுத்த விஷ்ணுவரதன் கேள்வி எழுப்பும்போது இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியுள்ளது. அப்போது வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் கண்களுக்கு கீழ் பகுதியில் எலும்பு உடைந்து காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. Blade Found in Soap: குளியல் சோப்பில் கிடந்த பிளேடு.. நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. பெற்றோர்களே உஷார்.!

வாடிக்கையாளரை டெலிவரி ஊழியர் தாக்கும் காட்சிகள் :