ஜனவரி 23, பரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலி (Bareilly) மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஸம்மில் (வயது 28). இவர், மொபைல் டவர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 21) காலை வீட்டை விட்டு வெளியேறிய முஸம்மில், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, தனது மகனுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், முஸம்மில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், தனது மகனை காணவில்லை என பிசல்பூர் காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். Student Dies By Suicide: கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை; பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
கொடூர கொலை:
இதனிடையே, பர்காபூர் பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு வாலிபரின் உடல் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், அந்த உடல் முஸாம்மில் உடல் என்பதை அடையாளம் கண்டனர். இதனையடுத்து, முஸாம்மில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில், முஸம்மில் கழுத்தை அறுத்தும், அவரது ஆணுறுப்பை சிதைத்து கொலை (Murder) செய்யப்பட்டது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை:
இதனையடுத்து, முஸம்மிலுக்கு சில நபர்களுடன் தகராறு இருந்ததாகவும், அவருடைய கொலைக்கு அவர்கள் தான் காரணம் என்றும் முஸம்மிலின் தந்தை மீண்டும் புகார் தெரிவித்தார். அதன்படி, பிலிபிட்டில் உள்ள ரிச்சவுலா கிராமத்தைச் சேர்ந்த அர்ஹான் மற்றும் அவரது நண்பர் குட்டு ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், முஸம்மிலை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அர்ஹானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன், முஸாம்மில் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனால், அர்ஹானுக்கும், முஸாம்மிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவர் கைது:
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், முஸம்மிலை கொலை செய்து, அவரது உடலை காரில் ஏற்றிச் சென்று வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அர்ஹான் மற்றும் குட்டு ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.