![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720071751Poison%20Death%20File%20Pic.jpg?width=380&height=214)
பிப்ரவரி 08, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கட்வால் (Gadwal) நகரில் உள்ள சிந்தலபேட்டையைச் சேர்ந்தவர் நவீன் (வயது 25). அதே காலனியில் வசிக்கும் ஒரு திருநங்கையை காதலித்து வந்துள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு, காலனிக்கு அருகிலுள்ள ஒரு கல்லறையில் தனது தந்தையின் கல்லறைக்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 5 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்.. கார் சக்கரத்தில் சிக்கி துள்ளத்துடிக்க மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
வாலிபர் தற்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு, கர்னூல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் (பிப்ரவரி 06) மாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், நவீன் உடல் பாகங்களில் காணப்பட்ட கடுமையான காயங்கள் குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. இந்தத் தாக்குதலை திருநங்கைகள் நடத்தியிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, நவீனின் தந்தை ஆஞ்சநேயுலு ஒரு வருடம் முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். தற்போது, நவீன் தற்கொலை (Suicide)செய்து கொண்டது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.